Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வண்டலூர் பூங்காவை சுற்றிப்பார்க்க குட்டி ரயில்: ரூ.3 கோடி ஒதுக்கிய முதல்வர்

வண்டலூர் பூங்காவை சுற்றிப்பார்க்க குட்டி ரயில்: ரூ.3 கோடி ஒதுக்கிய முதல்வர்
, வியாழன், 12 அக்டோபர் 2017 (16:30 IST)
சென்னையின் சுற்றுலா பகுதிகளில் முக்கியமான ஒன்று வண்டலூர் உயிரியல் பூங்கா. கடந்த 1985ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பூங்கா 1490 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஏராளமான வன விலங்குகள், பறவைகள் ஆகியவை இருக்கும் இந்த பூங்காவை முழுவதுமாக சுற்றிப்பார்ப்பது என்பது மிகவும் கடினம். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் நீண்ட தூரம் நடந்து சுற்றிப்பார்க்க சிரமப்பட்டு வந்தனர்.


 


எனவே வண்டலூர் பூங்காவை சுற்றிப்பார்க்க தொடர்வண்டி என்ற குட்டி ரயில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக சுற்றுலா பயணிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது நிறைவேற்றி வைக்க ஒப்புக்கொண்டுள்ளார்

இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 'அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ரூபாய் 3 கோடி செலவில் 40 இருக்கைகள்கொண்ட நான்கு சிறிய தொடர்வண்டிகள் வாங்க ஒப்புதல் வழங்கினார். இதற்கான பணி விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் விரைவில் சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவை ரயிலிலேயே சுற்றிப்பார்க்கலாம் என்றும்ன் அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

70 சதவீத லாரி ஓட்டுனர்களுக்கு கண் பார்வை குறைவு - அதிர்ச்சி தகவல்