Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுகவே வெல்லும்… தினகரனால் அதிமுக தோற்கும் – டிராபிக் ராமசாமி கருத்து!

Advertiesment
திமுகவே வெல்லும்… தினகரனால் அதிமுக தோற்கும் – டிராபிக் ராமசாமி கருத்து!
, வெள்ளி, 26 மார்ச் 2021 (07:43 IST)
தமிழகத்தில் திமுக வெல்லவே அதிக வாய்ப்பிருப்பதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

இன்னும் 9 நாட்களில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் பிரச்சாரங்கள் பரபரப்பாக நடந்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் நடத்தப்பட்டு அறிவிப்புகள் வெளியாகின்றன. கருத்துக் கணிப்புகள் பெரும்பாலானவற்றில் திமுக கூட்டணியே வெல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமியும் அதே கருத்தை முன்மொழிந்துள்ளார். இது சம்மந்தமாக புதிய தலைமுறை ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ‘நான் செல்லும் இடமெல்லாம் திமுக ஆதரவு மனப்பாண்மையை பார்க்கிறேன். தினகரனால் அதிமுக தோற்கும்’ எனக் கூறியுள்ளார். சமீபத்தில் அவர் சிறையில் இருந்து வெளியே வந்த அமமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலாவை சென்று சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்!