Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பாவி ஓட்டுநரை ட்ராப் செய்து தற்கொலைக்கு தூண்டிய சென்னை போலீஸ்

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2019 (15:28 IST)
சென்னையில் கால் டாக்சி ஓட்டுநர் போக்குவரத்து காவலர் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னையில் கால்டாக்சி ஓட்டுநர் சமீபத்தில் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கான காரணம் வெளிவராத நிலையில்,  அவர் தற்கொலைக்கு முன்னர் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த வாலிபர் வெளியிட்டுள்ள வீடியோவில் நான் கால் டாக்சி ஓட்டி வருகிறேன். பாடி - கோயம்பேடு சாலையில் கஸ்டமரை ஏற்றிக்கொண்டிருந்த போது அங்கு வந்த போக்குவரத்து காவலர் வேகமாக காரை தட்டி வண்டியை எடுக்க சொன்னார். நானும் வண்டியை கொஞ்சம் தூரம் தள்ளி நிறுத்தினேன். அங்கு நோ பார்க்கிங்கும் கிடையாது, அதுபோக அங்கு கூட்டமும் இல்லை. ஆனாலும் விடாத போலீஸ் மீண்டும் வந்து என்னை தகாத வார்த்தைகளால் திட்டினர். சோறு சாப்பிடுறியா இல்ல? என்றெல்லாம் வாய் கூசாமல் பேசினர். என் குடும்பத்தை அசிங்கமாக பேசினர். 
என் சாவிற்கு முக்கிய காரணம் சென்னை போலீஸ் தான் என கூறிவிட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இதே போல் போலீஸ் தொல்லையால் கால் டாக்சி ஓட்டுனர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து காவலர்களுக்கும் பணிச்சுமை இருக்கும் தான், இல்லை என சொல்லவில்லை. ஆனால் ஓட்டுநர் வேலைக்காக வெளியூரிலிருந்து வந்து அயராமல் உழைக்கும் இந்த மாதிரி கால் டாக்சி ஓட்டுனர்களை சில அதிகாரிகள் மனசாட்சி இல்லாமல் கேவலமாக நடத்துவது மன்னிக்க முடியாத குற்றம்.
சம்மந்தப்பட்ட அதிகாரியை சஸ்பண்டோ, இடமாற்றமோ செய்யாமல், அவரை டிஸ்மிஸ் செய்து அவரை ஜெயிலுக்குள் தள்ள வேண்டும். போலீஸ் என்றால் எதுவேண்டுமானாலும் செய்யலாமா. மக்களை காப்பது தான் போலீஸின் கடமை, தற்கொலைக்கு தூண்டுவது அல்ல. எப்போது தான் இந்த மாதிரியான கேவலமான அதிகாரிகள் திருந்துவார்களோ? பாவம் தங்கள் மகனை இழந்த அந்த குடும்பம் நிர்கதியாய் தவிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments