Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல்.. ட்ராபிக் போலீஸாக மாறிய பொதுமக்கள்!

Traffic
, புதன், 29 நவம்பர் 2023 (16:27 IST)
போக்குவரத்து அதிகம் உள்ள நேரங்களில் போக்குவரத்துக் காவலர்கள் சிக்னல் அருகே இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி


 
கடலூர் மாவட்டம் வடலூர் நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து அதிகம் உள்ள காலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் சிக்னல் அருகே இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது
வடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் வடலூர் நகரப் பகுதியில் கல்வி பயின்று வருகின்றனர்.

மேலும் வடலூர் பகுதியில் பல தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் வெளியூரில் இருந்து பெற்றோர்களுடன் இரு சக்கர வாகனத்தில் வரும் மாணவர்கள் காலை நேரங்களில் வடலூர் நான்கு முனை சந்திப்பு வழியாக கடந்து செல்கின்றனர்.

இதனால் காலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரத்தில் போக்குவரத்து போலீசார் சிக்னல் அருகே இல்லாததால் பொதுமக்கள் தானாக முன்வந்து போக்குவரத்தை சரி செய்யும் அவலநிலை தொடர்கதை ஆகி வருகிறது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி போக்குவரத்து போலீசார் அதிகாலை நேரத்தில் உள்ளாரா என்பதை கண்காணித்து உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பதவி நீக்கப்பட்ட சந்திர பிரியங்கா திடீரென முதல்வருடன் சந்திப்பு: புதுவையில் பரபரப்பு