Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயில் கட்டுமான பணி: சென்னை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

Siva
வெள்ளி, 15 மார்ச் 2024 (22:16 IST)
மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக சென்னை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர்களால் முன்மொழியப்பட்ட பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தரமணி மற்றும் துரைப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள உள்ளதால் இப்பணிகளைக் கருத்தில் கொண்டு, பின்வரும் சாலைகளில் போக்குவரத்து மாற்றமானது வருகின்ற 16.03.2024 முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
 
வேளச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் அப்பல்லோ சந்திப்பில் வலது புறம் திரும்பி துரைப்பாக்கம் நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் நேராக சென்று துர்யா ஹோட்டல் முன் “யு” டர்ன் செய்து துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூருக்குச் செல்லலாம்.
 
அடையாறு மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் அப்பல்லோ சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வேளச்சேரி நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் மேலும் நேராக சென்று உலக வர்த்தக மையத்தின் முன் “யு” டர்ன் செய்து அப்பல்லோ சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி வேளச்சேரியை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடியில் உள்ள நிறம், யானை, வாகை மலருக்கு விளக்கம் அளித்த தவெக தலைவர் விஜய்..!

தவெகவின் 5 கொள்கை தலைவர்கள் இவர்கள் தான்.. விஜய் அறிவிப்பு..!

தவெக மாநாடு: பெரியார் வேணும்.. கடவுள் மறுப்பு வேணாம்! - பெரியார் கொள்கை குறித்து விஜய் பேச்சு!

தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் எதனால்? விஜய் பேச்சு

மக்கள் விரோத ஆட்சியை நடத்தி விட்டு திராவிட மாடல் என ஏமாற்றுகிறார்கள்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments