கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம்.. பொதுச்செயலாளருக்கு கொடுத்த மன்சூர் அலிகான்..!

Siva
வெள்ளி, 15 மார்ச் 2024 (22:04 IST)
நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி எந்த கூட்டணியில் இணைவது என்பது குறித்து  முடிவு எடுக்க அந்த கட்சியின் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்படுவதாக இந்த கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் குறித்தான கட்சியின் செயற்குழு கூட்டம் வளசரவாக்கத்தில் நடைபெற்றது

இந்த செயற்குழு கூட்டத்தின் முடிவில் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக புலிகள் சார்பில் கூட்டணி குறித்த முடிவு எடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் அவர்களுக்கு அளிக்கப்படுவதாகவும் பொதுச்செயலாளர் தலைமையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது முடிவு செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

எனவே தேர்தல் பிரச்சார குழுவானது கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வரும் தேர்தலில் இந்திய ஜனநாயக புலிகள் எந்த கட்சிகள் கூட்டணியில் சேர்வது என்பது குறித்த முடிவை பொதுச் செயலாளர் எடுப்பார் என்பது தெரிய வருகிறது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments