டெல்லியில் மத்திய அமைச்சரை திடீரென சந்தித்த திமுக எம்.பி., டி.ஆர்.பாலு.. என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (10:42 IST)
டெல்லியில் மத்திய அமைச்சர் முரளிதரண் அவர்களை திமுக எம்.பி., டி.ஆர்.பாலு இன்று நேரில் சந்தித்தார்.
 
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரிக்கை விடுத்தும், மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் மத்திய அமைச்சரிடம்  திமுக எம்.பி., டி.ஆர்.பாலு வழங்கினார். மேலும் மத்திய அமைச்சருடனான இந்த சந்திப்பின்போது, மீனவர்களின் குடும்பத்தினரும் உடனிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்  எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஐந்து விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்து மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது 
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் நேற்று கடிதம் எழுதிய நிலையில் இன்று மத்திய அமைச்சரை டிஆர் பாலு சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்க முடிவு..!

மசோதாக்களை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்.. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி..!

அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் வெளிமாநில வாக்காளர்களை சேர்க்க சதி: காங்கிரஸ் புகார்

பங்குச்சந்தை 2வது நாளாக ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments