Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழைவெள்ளம் பாதிப்பு ; மத்திய அரசிடம் 2,079 கோடி கேட்கும் தமிழக அரசு!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (10:56 IST)
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் டி.ஆர்.பாலு மத்திய அரசிடம் ரூ.2,079 கோடி அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வந்த கனமழையால் பல மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. சென்னையில் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய ரூ.2,079 கோடி வழங்குமாறும், அதில் ரூ.550 கோடியை உடனடியாக வழங்குமாறும் அமைச்சர் டி.ஆர்.பாலு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அமைச்சர் டி.ஆர்.பாலு தமிழகத்தில் கடந்த 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை வழக்கத்தை விட 49.6 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாகவும், இதனால் 49,757 ஹெக்டேர் விவசாயம் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண்டுக்கு இனி 15 சிலிண்டர் மட்டும்தான்! எண்ணெய் நிறுவனங்கள் புதிய விதிமுறை!

ஆட்டோ ஓட்ட விரும்பும் பெண்களுக்கு ‘பிங்க் ஆட்டோ’ - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்!

ஒவ்வொரு தாம்பத்ய உறவுக்கும் ரூ.5000 கேட்ட மனைவி.. போலீசில் புகார் அளித்த கணவர்..!

அண்ணாமலை தரம் தாழ்ந்து விஜய்யை விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது: தவெக கண்டனம்..!

மற்றுத்திறனாளிகளுக்ககு ஸ்கூட்டர்.. திருப்பத்தூர் வரை நான்கு வழிச்சாலை.. சட்டசபையில் முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments