Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடைக்கானல் குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடல்.. அதிருப்தியில் சுற்றுலா பயணிகள்..!

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (09:28 IST)
கொடைக்கானலில் உள்ள குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். 
 
தற்போது கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான மேயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்டவை பராமரிப்பு பணிகள் காரணமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 
 
மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு மேற்கண்ட இடங்களை பார்க்க அனுமதி இல்லை என வனத்துறை என தெரிவித்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் காட்டும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்  
 
இருப்பினும் விரைவில் பராமரிப்பு பணிகளை முடித்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments