Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாப் 10 உலகச்செய்திகள்

டாப் 10  உலகச்செய்திகள்
, சனி, 10 ஜூலை 2021 (23:35 IST)
இந்த வாரம் உலகைச் சுற்றி நடந்த முக்கிய நிகழ்வுகளை டாப் 10  உலகச்செய்திகளாகப் பார்க்கலாம். 
 
1. ரஜினிகாந்த் சென்னை திருப்பினார்
 
கடந்தமாதம் 19 ஆம் தேதி அமெரிக்கா சென்ற ரஜினி மருத்துவபரிசோதனைக்கு பிறகு நேற்று சென்னை திரும்பினார்.
 
2.  மகேந்திரன் திமுகவின் இணைந்தார். 
 
கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன், நேற்று முன் தினம் தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியின் இணைந்தார்.
 
3. ஜிகா வைரஸ்
 
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 15 பேர் இதுவரை ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
4. வலிமை அப்டேட்
 
லண்டனின் யூரோ கால்பந்து தொடர் நடைபெறும் நிலையில் அஜித் ரசிகர்கள் மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்டனர்.
 
5.  யூரோ கால்பந்து தொடர்.
 
ஸ்பெயினை வீழ்த்தி 4 வது முறையாக இத்தாலி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றோரு அரையிறுதியில் இங்கிலாந்து டென்மார்க் மோதவுள்ளது.
 
6. ஆர்.ஆர்.ஆர் பட அப்டேட்
 
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகும் ஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து தர்பார் பட ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராம்-லட்சுமணன் விலகல். 
 
7.  நடிகர் திலீப்குமார் மறைவு
 
பாலிவுட் நடிகர் திலீப்குமார் தனது 98 வயதில் உடல்நலக்குறைவால் ஜூலை 7 ஆம் தேதி காலமானார்.
 
8. ஹட்டி அதிபர் படுகொலை
 
ஹட்டி நாட்டின் அதிபர் ஜெவினெல் மோஸ் ஜூலை 7  ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
 
9. அண்ணாத்த ரிலீஸ் தேதி
 
ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கிவரும் அண்ணாத்த படம் வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியை ஒட்டி ரிலீஸாகிறது.
 
10.  தமிழக டிஜிபி
 
தமிழகத்தில் 30 வது சட்டம் ஒழுங்கு டிஜிபியக சைலேந்திரபாபு ஐபிஎஸ்-ஐ தமிழக அர்சு நியமித்துள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ...நாளைய முதல்வரே என போஸ்டர் !