சென்னை உட்பட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடுமையான வெயில் அடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
	
 
									
										
								
																	
	
	 
	அக்னி நட்சத்திரம் முடிந்துவிட்ட நிலையிலும், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல இடங்களிலும் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இதனால், வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். பல இடங்களில் அனல் காற்றும் வீசுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
	 
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை உட்பட வட தமிழகத்தில் அதிக வெப்பநிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  அதேநேரம், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.