Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை..!

Siva
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (09:22 IST)
நாளை தொழிலாளர் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கும் நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளை அரசு விடுமுறை என்பதும் நாளை தொழிலாளர்களை வேலைக்கு அழைக்க கூடாது என்று தொழிலாளர் துறை அறிவித்துள்ளது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் முன்கூட்டியே அதிக சரக்குகளை வாங்கி வைத்து கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பான வெளியான அறிக்கைகள் கூறப்பட்டிருப்பதாவது: உழைப்பின் மகத்துவத்தை உணர்த்தும் விதமாக தொழிலாளர் தினம் நாளை (புதன்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.

மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. அதையும் மீறி விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுபான பார்கள் திறக்கப்பட்டு இருந்தாலும், பாரில் மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தாலும் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், ரத்து செய்தல் மற்றும் மதுக்கூடம் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்." என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments