Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு.. முதல் நாளே புத்தகங்கள் வழங்க ஏற்பாடு..!

Siva
ஞாயிறு, 9 ஜூன் 2024 (08:54 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்த நிலையில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும், முதல் நாளே மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
 
கோடை விடுமுறை மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிகள் முடிந்து ஜூன் 6-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மாணவர்களின் நலன் கருதி ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.
 
இந்த நிலையில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வளாகத்தில் பராமரிப்பு, பள்ளி வாகனங்கள் சோதனை உள்பட அனைத்து முன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்டு பள்ளிகள் திறக்க தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
மேலும் வரும் கல்வி ஆண்டுக்கான அதாவது 2024-25ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments