Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்!

தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து  முகாம்!

Sinoj

, சனி, 2 மார்ச் 2024 (20:32 IST)
போலியோ சொட்டு மருந்து முகாம்    நாளை தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 43,051 மையங்களில், 57.84 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து தமிழ் நாடு அரசு தெரிவித்துள்ளதாவது:
 
''போலியோ சொட்டு மருந்து முகாம் 03.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள். பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும்.
 
* இம்மையங்களில் 57.84 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.
 
யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் போலியோ முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன. முக்கிய அம்சங்கள்:
 
1. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.
 
2.5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 03.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
 
3. தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கை கழுவுவது / Santizier உபயோகப்படுத்துவது கட்டாயமாகும்.
 
4. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.
 
5. அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.
 
6.விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.
 
7. முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.''என்று தெரிவித்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் 2023-24 -ல் தமிழ்நாட்டின் ஷர்வானிகா மற்றும் ராகவ் வெற்றி