Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: இன்றே நேரில் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்..!

Mahendran
வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (14:33 IST)
நாளை அதாவது மார்ச் ஒன்றாம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நிலையில் உலகநாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று முதல்வரை நேரில் சந்தித்து தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் தனது எக்ஸ்பிரஸ் கூறி இருப்பதாவது:
 
நாளை பிறந்த நாள் காணும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், என்னுடைய அருமை நண்பர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நல்ல ஆரோக்யத்துடன், நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினேன். 
 
தமிழக மக்களும், தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் பல்வேறு நெருக்குதல்களுக்கு ஆளாகும் காலத்தில் தன் முன்னோர்களைப் போலவே தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக உருவெடுத்திருக்கிறார் திரு. ஸ்டாலின், மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு!
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா முதல்வருக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த மிரட்டல்.. பாதுகாப்பு அதிகரிப்பு..!

பேருந்தில் பெண் பலாத்காரம்.. ட்ரோன்கள், மோப்ப நாய்களை பயன்படுத்தி 75 மணி நேரத்தில் குற்றவாளி கைது..

மொழி உணர்ச்சி பத்தி நீங்க பாடம் எடுக்காதீங்க! - ஆளுநருக்கு அமைச்சர் பதிலடி!

எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டார். வாய் தவறிய உளறிய திண்டுக்கல் சீனிவாசன்..!

1000 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் தலையில் இடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments