Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 40 ரூபாய் குறைந்தது தக்காளி விலை.. பொதுமக்கள் நிம்மதி..!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (07:31 IST)
தக்காளி விலை நேற்று 200 ரூபாய் வரை விற்பனையாகிக் கொண்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 40 ரூபாய் குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 
 
தக்காளி விலை கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் 50 ரூபாய் என இருந்த தக்காளியை விலை 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகமானதை எடுத்து ஒரு கிலோவுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளதாகவும் 140 முதல் 160 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்பனையாகி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இனி படிப்படியாக தக்காளி விலை குறைய வாய்ப்பு இருக்கிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளதை அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.  மேலும் இன்று முதல் தமிழக முழுவதும் 500 ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனையாகும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவின் தியான்ஜின் நகரில் பிரதமர் மோடி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பு

சென்னை விமான நிலையத்தில் திடீர் சோதனை செய்யும் சிபிஐ அதிகாரிகள்.. என்ன காரணம்?

ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிடாமல் தடுக்க, பாலஸ்தீன அதிபரின் விசாவை ரத்து செய்தது அமெரிக்க அரசு!

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. ரூ.70 முதல் ரூ.395 அதிகம் என தகவல்..!

விஜய் பேசுவதை கண்டுகொள்ளாதீர்.. தொண்டர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments