சுங்கக்கட்டணம் திடீர் உயர்வு: வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (08:10 IST)
வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் சுங்க கட்டணம் உயரும் என்ற அறிவிப்பு பெரும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
ஒவ்வொரு ஆண்டும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருவதாகவும் அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை நீக்கவேண்டும் என பல அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது அதற்கு நேர்மாறாக சுங்க கட்டணங்களை அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயரும் சுங்கச்சாவடிகள் பின்வருமாறு: திண்டிவனம் - உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை - பாடலூர் சாலையில் உள்ள திருமாந்துறை, சென்னை - தடா சாலையில் உள்ள நல்லூர், சேலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள மேட்டுப்பட்டி, சேலம் - குமாரபாளையம் சாலையில் உள்ள வைகுந்தம், திருச்சி - திண்டுக்கல் சாலையில் உள்ள பொன்னம்பலப்பட்டி, தஞ்சாவூர் - திருச்சி சாலையில் உள்ள வாழவந்தான்கோட்டை ஆகிய 14 சுங்கச் சாவடி
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments