Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு : பொதுமக்கள் அதிர்ச்சி

சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு : பொதுமக்கள் அதிர்ச்சி
, சனி, 1 செப்டம்பர் 2018 (11:33 IST)
தமிழகத்தில் 14 சுங்கச் சாவடிகளில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
மக்களிடையே பல கோடிகளை கொள்ளையடிப்பதாகவும், சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என ஏற்கனவே பல அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இந்நிலையில், அதன் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்டது.
 
அதில் திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள பொன்னம்பலப்பட்டி சுங்கச்சாவடி உள்ளிட்ட 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1.09 அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் கார்களுக்கு ரூ.80ம், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.75ம் வசூக்கப்பட இருக்கிறது. அதேபோல், பொன்னம்பலப்பட்டி சுங்கச்சாவடியில் கிலோ மீட்டருக்கு ரூ.2.02 உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் மொத்தம் 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
 
இந்த விலை உயர்வுக்கு வானக ஓட்டிகள், குறிப்பாக லாரி உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலைகள் மிகவும் மோசமாக பராமரிக்கிறார்கள். ஆனால், சுங்க சாவடிகளில் கொள்ளை அடிக்கிறார்கள் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவியை வீட்டிற்கு அனுப்ப மறுத்த மாமனார் - ஆத்திரத்தில் மாமனாரை வெட்டிய மருமகன்