Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிகமாக வசூலிக்கும் சுங்கச் சாவடி : முற்றுகையிட வேன் ஓட்டுனர்கள் : கரூரில் பரபரப்பு

அதிகமாக வசூலிக்கும் சுங்கச் சாவடி : முற்றுகையிட வேன் ஓட்டுனர்கள் : கரூரில் பரபரப்பு

அதிகமாக வசூலிக்கும் சுங்கச் சாவடி : முற்றுகையிட வேன் ஓட்டுனர்கள் : கரூரில் பரபரப்பு
, சனி, 1 அக்டோபர் 2016 (17:11 IST)
கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் செயல்படும் சுங்கச் சாவடியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் பணம் வசூலிப்பதாகவும், டேல்கேட் என்ற பெயரில் நிர்வாக சீர்கேட்டில் கரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாக கூறி சுற்றுலா வேன் ஓட்டுநர்கள் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


 

 
கரூர்–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணவாசி அருகே தனியாருக்கு சொந்தமான சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. கரூரிலிருந்து இந்த வழியாக செல்லும் சுற்றுலா வேன்களுக்கு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக தொகை கேட்பதாகவும், அதை கேள்வி கேட்டால் ஆர்.சி கேட்பதாகக் கூறி சுமார் 50 க்கும் மேற்பட்ட சுற்றுலா ஓட்டுநர்கள் சங்கத்தினர் அந்த பகுதியில் முற்றுகையிட்டு சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

webdunia

 

 
மேலும், தமிழகத்தில் எந்த சுங்கச் சாவடியிலும் இல்லாத வகையில் இங்கு மட்டும் அதிக தொகை கேட்பதாகவும் குற்றம்சாட்டினர். கரூரிலிருந்து திருச்சி செல்ல 5 வழிகளும், திருச்சியிலிருந்து கரூர் வர 5 வழிகள் என்று மொத்தம் 10 வழிகள் உள்ள நிலையில் திருச்சி செல்ல 2 வழிகளும், கரூர் வருவதற்கு 2 வழிகளும் மட்டும் இயங்குவதாக குற்றம் சாட்டிய ஒட்டுநர்கள், இதனால் பல மணி நேரம் வாகனங்கள் மணிக்கணக்கில் தேங்குவதாகவும் குற்றம் சாட்டினார்கள். 

webdunia

 

 
இந்த டி.கே.டி.ஆர்.பி.எல் நிர்வாக சீர்கேடு நீண்ட நாட்களாக இருந்து வரும் நிலையில், நிர்வாக சீர்கேட்டிலும், அவ்வப்போது பயணிகளும், வாகன ஒட்டிகளும், உரிமையாளர்களும் சிரமப்படுவதாக குற்றம் சாட்டிய அவர்கள் சுமார் 2 மணி நேரமாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இதனையடுத்து அங்கு வந்த மாயனூர் காவல் நிலைய போலீசார் ஓட்டுநர்களிடமும், சுங்கச்சாவடி நிர்வாகத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தி ஓட்டுநர்களை கலைந்து போகச் செய்தனர். இதனால் அந்த பகுதியில் ஒரு பாதையில் மட்டும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
சி.ஆனந்த குமார் - கரூர் செய்தியாளர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா உடல் நலம் பற்றிய கருணாநிதி கருத்து : பண்ருட்டி ராமச்சந்திரன் பதிலடி