Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

13 மளிகை பொருட்கள் வழங்க இன்றுமுதல் டோக்கன் விநியோகம்!

Advertiesment
13 மளிகை பொருட்கள் வழங்க இன்றுமுதல் டோக்கன் விநியோகம்!
, செவ்வாய், 1 ஜூன் 2021 (07:28 IST)
தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே 2000 ரூபாய் வழங்கியுள்ள நிலையில் மேலும் ரூபாய் 2000 ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஜூன் மூன்றாம் தேதி முதல் இந்த பணம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 13 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இதனை அடுத்து தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 13 வகை மளிகை பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பொதுமக்கள் டோக்கன் வாங்க ரேஷன் கடைகளுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கி வருகிறார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஜூன் 4ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என்றும் ஜூன் 5-ஆம் தேதி முதல் ரேஷனில் 13 வகை பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் நிர்வாக காரணங்களுக்காக துவரம் பருப்பு மட்டும் வரும் 7ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னைக்கு வந்தது 83.28 மெட்ரிக் டன் ஆக்சிஜன்!