தமிழகத்தில் தினந்தோறும் குறிப்பாக 5 மாநில தேர்தலுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலை தினசரி விலை உயர்ந்து கொண்டிருப்பது பொது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பெட்ரோல் டீசலுக்கான வரியை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை கண்டு கொள்ளப்படாமல் இருப்பதால் தினந்தோரும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது
இந்த நிலையில் சமீபத்தில் பெட்ரோல் விலை தமிழகத்தில் 100 ரூபாயை தாண்டி நிலையில் தற்போது 101 ரூபாயை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்துள்ளதால் ஒரு லிட்டர் பெட்ரோல் 101.06 என்ற விலைக்கும் சென்னையில் டீசல் விலை 15 காசுகள் உயர்ந்துள்ளதால் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.06 என்ற விலைக்கும் விற்பனையாகி வருகிறது. விரைவில் பெட்ரோல் விலை ரூ.110ம், டீசல் விலை ரூ100ம் என உயருமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.