இன்று 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (08:31 IST)
இன்று சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சில நாட்களில் மழை பெய்த நிலையில் தற்போது 13 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தரும்புரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

கோவில் பிரசாதத்தில் ரசாயனம் கலக்க தீவிரவாதிகள் திட்டம்.. அண்ணாமலை அதிர்ச்சி தகவல்..!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.2400 உயர்வு..!

பங்குச்சந்தையில் முதலீடு என ரூ.10 கோடி ஏமாந்த வழக்கறிஞர்.. நூதன மோசடி

அடுத்த கட்டுரையில்
Show comments