தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கி நடந்து வரும் நிலையில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.