Publish Date: Mon, 05 Sep 2022 (13:23 IST)
Updated Date: Mon, 05 Sep 2022 (13:25 IST)
தமிழகத்தில் அவ்வப்போது கனமழை குறித்த எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
நீலகிரி ஈரோடு கோவை திருப்பூர் தேனி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வளிமண்டல அடுக்கு சுழற்சி காரணமாக 21 மாவட்டங்களில் இன்று கனமழை இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது