Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு: மாணவர்கள் ஆர்வம்

Webdunia
புதன், 30 மே 2018 (07:22 IST)
இதுவரை 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த கல்வியாண்டில் முதல்முறையாக 11ஆம் வகுப்பு என்று கூறப்படும் பிளஸ் 1 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. முதல்முறையாக இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய பிளஸ் 1 மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது.
 
இன்று காலை 9 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளதாகவும், இந்த தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத்துறையின் இணைய தளங்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம்  மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கல்வியாண்டில் சுமார் 8 லட்சத்து 62 ஆயிரம் மாணவ - மாணவிகள் பிளஸ் 1 தேர்வுகளை எழுதியுள்ளனர் என்பதும் அவர்கள் அனைவரும் இன்று தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று வெளிவரும் தேர்வு முடிவில் மாணவர்கள் பாஸ் ஆகவில்லை என்றாலும் அவர் தொடர்ந்து பிளஸ் 2 வகுப்புகளுக்கு செல்லலாம் என்பதும், தேர்ச்சி பெறாத பாடங்களில் பிளஸ் 2 தேர்வின் இடையில் நடைபெறும் சிறப்பு துணை தேர்வில் எழுதி தேர்ச்சி பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments