Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

212 நாட்களாக மாறாத பெட்ரோல் விலை: எப்போதுதான் குறையும்?

petrol
, திங்கள், 19 டிசம்பர் 2022 (08:06 IST)
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 211 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் இல்லாமல் இருக்கும் நிலையில் இன்று 212 ஆவது நாளாகவும் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நாளுக்குநாள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் உலக நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டு வருகிறது 
 
ஆனால் இந்தியாவில் மட்டும் கடந்த 7 மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த போதிலும் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வாய்ப்பே இல்லை என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

65.78 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!