Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (08:20 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து கொண்டு வரும் காரணத்தால் சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயராமல் ஒரே விலையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 18 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே விலையாக விற்பனையாகிக் கொண்டிருந்த நிலையில் இன்றும் அதே விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்னும் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை குறைத்தால் 70 ரூபாய்க்கு பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இன்றைய பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 98.96
 
இன்றைய டீசல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 93.26
 
 

தொடர்புடைய செய்திகள்

ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! – மிஸ் பண்ணிடாதீங்க!

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments