கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வந்தது என்பதும் இதனை அடுத்து பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழக அரசின் பட்ஜெட்டில் பெட்ரோலுக்கான வரி மூன்று ரூபாய் குறைக்கப்பட்டதை அடுத்து நூறு ரூபாய்க்குள் பெட்ரோல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்த நிலையில் இன்றும் பெட்ரோல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதனையடுத்து இன்று பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 99.10 என்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 93,52 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது