Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்: வெள்ள நிவாரண நிதி வழங்குவது குறித்து ஆலோசனை

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (07:51 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பல இடங்களில் சேதம் ஏற்பட்டது என்பதும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்ள இருப்பதாகவும் வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் இன்றைய கூட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேளாண்சார் தொழில்களுக்கு மகத்தான எதிர்காலம்! ஈஷா அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா 2.O

ராகுல்காந்தி இந்திய அரசியலமைப்பையே அவமதித்துவிட்டார்! - தேர்தல் ஆணையர் வேதனை!

காதலியின் கைப்பிடிக்க மனைவி கொலை! திருட்டு என நாடகமாடிய பாஜக உள்ளூர் தலைவர்!

திருமாவளவனுக்கு சமூகநீதி தேவையில்ல.. தேர்தல் சீட்தான் தேவை! - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

முன்பு வாக்கு திருட்டு தெரியாமல் இருந்தது, ஆனால் இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments