Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று இறைச்சி கடைகள் இயங்காது.. 2 நாட்களுக்கு மதுக் கடைகளுக்கும் லீவு.. அதிரடி அறிவிப்பு..!

Goat Meat

Siva

, வியாழன், 25 ஜனவரி 2024 (07:29 IST)
இன்று தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தில் இறைச்சி கடைகள் இயங்காது என்றும் அதேபோல் டாஸ்மாக் மது கடைகளுக்கு இரண்டு நாள் லீவு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று  ஜனவரி 25ஆம் தேதி தமிழக முழுவதும் இறைச்சி கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாளை மற்றும் நாளை மறுநாள்  குடியரசு தினத்தை முன்னிட்டு இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனையின் விதிகளின்படி ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு இரண்டு தினங்கள் ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை விடப்படுவது வழக்கமான ஒன்று. எனவே இந்த இரண்டு நாட்களும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

சென்னை உள்பட தமிழக முழுவதும் இன்று இறைச்சி கடைகள், நாளை மற்றும் நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்

கண்டிப்பாக கிளப்புகளில் உள்ள பார்கள் கண்டிப்பாக மூடப்படும் என்றும் விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தி கைது செய்யப்படுவார்: அசாம் முதல்வர்..!