இன்று ஓநாய் சந்திர கிரகணம்: வெறும் கண்களாலேயே பார்க்கலாம்!

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (10:55 IST)
இன்று இரவு நடைபெற இருக்கும் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தை மக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஆண்டின் முதல் பௌர்ணமியான இது மேலை நாடுகளில் ஓநாய் பௌர்ணமி என்று கூறப்படுகிறது. மற்ற பௌர்ணமி நாட்களை விட நிலவு அளவில் மிகப்பெரியதாக தெரியும் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்த ஓநாய் பௌர்ணமியில் கிரகணம் நடைபெறுவதால் இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என நாசா விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.

இது மற்ற நாட்களில் வரும் சந்திர கிரகணத்தை போல முழுமையாக நிலவை மறைக்காது. பூமியின் பகுதியளவு நிழலே சந்திரன் மீது பதியும் என்பதால் சந்திரனின் ஒளி மங்கி காணப்படும். இதை பெனும்ப்ரல் வகை சந்திர கிரகணம் என கூறுவார்கள்.

இன்று இரவு 10.30 மணியளவில் தொடங்கும் கிரகணம் அதிகாலை 3 மணி வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த கிரகணத்தை ஆஸ்திரேலியா, இந்தியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பல பகுதியிலிருந்தும் காணமுடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments