Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துபாயில் கஷ்டப்படும் கணவன்... காப்பாற்ற சொல்லி மனைவி கோரிக்கை !

துபாயில் கஷ்டப்படும் கணவன்... காப்பாற்ற சொல்லி மனைவி கோரிக்கை !
, வியாழன், 9 ஜனவரி 2020 (19:35 IST)
துபாய் நாட்டில் வேலை செய்வதற்காகச் சென்ற கணவன் துன்பப்படுவதாகவும் அவரை மீட்டுத் தருமாறு சொல்லி ஒரு பெண் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
காரைக்குடி அருகே உள்ள அரண்மனை சிறுவயலைச் சேர்ந்த சுரேஷ் துபாய் நாட்டிற்கு கொத்தனார் வேலைக்குச் சென்றுள்ளார்.
 
சுரேஷ் அங்கு சென்றதும் அவருக்கு உரிய வேலை கொடுக்காமல் அவரை துன்புறுத்தி, அவரை வேலையை விட்டு வெளியேற்றியதாகவும் அவரது மனைவிக்கு ஒரு வீடியோவை அனுப்பியுள்ளார்.
 
மேலும், தன்னை இங்கிருந்து மீட்குமாறு வீடியோவில் கேட்டுக் கொண்டுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷுன் மனைவி கவிதா, தனது கணவரை மீட்டு தருமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கல் பரிசுப்பணம் வாங்க வரிசையில் நின்றவர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்!