Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று ஒரு மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

இன்று ஒரு மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
, வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (07:52 IST)
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இன்று நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். 
 
ஒவ்வொரு ஆண்டும் வேளாங்கண்ணியில் உள்ள ஆலய பேராலயத்தில் பெருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். உள்ளூரில் மட்டுமின்றி வெளி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாநிலத்திலிருந்தும் பலர் இந்த திருவிழாவை காண வருகை தருவார்கள். 
 
இந்த நிலையில் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 
 
இன்றைய விடுமுறை தினத்தை ஈடு செய்ய செப்டம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளியில் ஓய்வெடுத்தால் ரூ.7500 கட்டணம்.. பள்ளி நிர்வாக அறிவிப்பால் பெற்றோர் அதிர்ச்சி..!