Publish Date: Fri, 28 Feb 2020 (09:25 IST)
Updated Date: Fri, 28 Feb 2020 (09:27 IST)
கடந்த சில நாட்களாக மெல்ல விலை குறைந்து வந்த தங்கம் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
கடந்த வாரத்தில் கிடுகிடுவென விலை உயர்ந்த தங்கம் 33 ஆயிரத்தை தாண்டியது. பிறகு மெல்ல விலை குறைந்து நேற்று 22 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.32,488ஆக விற்பனையாகி வந்தது. இந்நிலையின் இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ரூ.32,656க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ஒரே நாளில் ரூ.21 விலை உயர்ந்து ரூ.4,082க்கு விற்பனையாகி வருகிறது.
24 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.35,640க்கும், ஒரு கிராம் ரூ.4,455க்கும் விற்பனையாகி வருகிறது.
Prasanth Karthick
Publish Date: Fri, 28 Feb 2020 (09:25 IST)
Updated Date: Fri, 28 Feb 2020 (09:27 IST)