Publish Date: Sun, 14 Feb 2021 (07:24 IST)
Updated Date: Sun, 14 Feb 2021 (07:25 IST)
பிரதமர் மோடி இன்று சென்னை வர இருக்கும் நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயிலில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்க வழித் தடத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளதை அடுத்து இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது
இதனால் இன்று மதியம் 2 மணி முதல் சென்னை மெட்ரோ ரயில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது . இந்த அறிவிப்பு சென்னை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது