Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை தோன்றுகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தொடர்மழைக்கு வாய்ப்பு..!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (07:51 IST)
தென்கிழக்கு வங்க கடலில் நாளை அதாவது நவம்பர் 14ஆம் தேதி  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்றும் இன்னும் ஒரு வாரத்திற்கு தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது  

இன்று மாலை 5 மணிக்கு மேல் கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  குறிப்பாக புதுச்சேரி, நெய்வேலி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம்  ஆகிய மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் மழை ஆரம்பிக்கும் என்றும் அதன் பிறகு மெல்ல மெல்ல தீவிரமடைந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் இதர தென் மாவட்டங்களிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.

நாளை காலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக டெல்டா பகுதிகளில், தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.  தீபாவளி அன்று இடைவெளி விட்ட மழையானது வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தொடர் மழையாக வாய்ப்புள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

ஆட்சிக்கு வந்தா ஒரு பேச்சு.. வரலைன்னா ஒரு பேச்சு! - மு.க.ஸ்டாலின் மீது தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments