வழக்கம் போல இன்றும் பெட்ரோல், டிசல் விலை உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை படுவீழ்ச்சி அடைந்த நிலையிலும் இந்தியாவில் மட்டும் வரிகள் உயர்வு காரணமாக பெட்ரோல் டீசலின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே உள்ளது.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 15 தினங்களுக்கும் மேலாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்றும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 22 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.83.59ஆக விற்கப்படுகிறது.
இதேபோல் டீசல் விலை 17 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.61 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.