Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்துக்கு இன்று வருகிறது 6.72 லட்சம் தடுப்பூசிகள்: மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (08:45 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி பற்றாக்குறை இருந்ததாகவும் மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தடுப்பூசி தொகுப்புகளை சரியாக தரவில்லை என்றும் தமிழக அரசின் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது 
 
இந்த நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை உடனடியாக தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் 
 
இந்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் தற்போது கூடுதலாக தடுப்பூசிகள் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகத்திற்கு கூடுதலாக 6.72 லட்சம் தடுப்பூசிகள் இன்றுவரை உள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் 2.05 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள் என்றும், 4.67 லட்சம் கோவாக்சின் டோஸ்கள் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் 6.72 லட்சம் தடுப்பூசிகள் வந்த பிறகு அவை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து வழங்கப்படும் என்று மாநில அரசு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments