Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேதாத்திரி மகரிஷியின் தத்துவங்கள்...

வேதாத்திரி மகரிஷியின் தத்துவங்கள்...
, செவ்வாய், 22 ஜூன் 2021 (23:38 IST)
பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க  முன் வாருங்கள்.
 
பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து  அடக்கத்தையும், பண்பையும் காட்டுங்கள்.
 
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
 
கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள். அற்ப விஷயங்களை பெரிது படுத்தாதீர்கள்.
 
உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்பதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்பதை இங்கே  சொல்வதையும் விடுங்கள்.
 
நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும்  பேசிக்கொண்டே இருப்பதை விடுங்கள்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கெட்ட கனவுகளுக்கும் நல்ல கனவுகளுக்கும் பலன்கள் தெரியுமா...?