Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒரே நாளில் 2.34 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி: தமிழகம் சாதனை!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (19:07 IST)
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 2.34 லட்சம் தடுப்பூசி சிறுவர்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக சற்றுமுன் கிடைத்த தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஜனவரி 3ஆம் தேதி முதல் சிறார்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இன்று காலை முதலே சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆரம்பித்துவைத்த சிறார்களுக்கான தடுப்பூசிகள் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக செலுத்தப்பட்டது என்பதும் இன்று ஒரே நாளில் 2.34 லட்சம் தடுப்பூசி தமிழகத்தில் மட்டும் செலுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 23 ஆயிரத்து 310 சிறார்களுக்கும் குறைந்தபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1886 சிறார்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. சென்னையில் 4670 சிறார்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments