கடந்த 21 ஆம் தேதி இந்தியாவின் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இதில் பெரும்பாலான ஊடகங்கள் பாஜக பெரும்பான்மையான இடங்களைப் பிடிக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தன.
இதற்கு எதிர்கட்சிகள் பலரும் கருத்துக்கணிப்புகளுக்கு எதிராக தங்கள் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அடுத்த 24 மணிநேரங்களுக்கு தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் திராவிடர் கட்சியின் தலைவர் கருத்துக்கணிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது :
கருத்துக்கணிப்புகளை தடை செய்ய வேண்டும். கருத்துக்கணிப்புகள் ராசி பலன் போன்றது. எனவே இக்கருத்துக்கணிப்புகள் தவறாகுமானால் அதைத் தெரிவித்தவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் என்பது வெறும் வாயை மெல்பவர்களுக்கு சிறிது அவல் கிடைத்த மாதிரி என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
கடந்த 22 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் செய்தித்தாள்களில் , ஊடகங்களில் வெளியான கருத்துக்கணிப்புகள் எல்லாம் பாஜகவால் திட்டமிட்டு பரப்ப ஏற்பட்டது என்பது இப்போதைய செய்திகளில் இருந்து தெரிகிறது.
மேலும் சிறிய கட்சிகளை மிரட்டி பாஜக கூட்டணிக்குள் வரவே இத்தகைய ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதற்கு உதாரணமாக நடந்து முடிந்த குஜராத் மாநிலம் சட்டப்பேரவை தேர்தலில் 17 தொகுதிகளில் கூடுதல் வாக்குகள் வாக்குப்பதிவு மெஷினில் பதிவானது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளார்.