டி.என்.பி.எஸ்.சி நேர்முகத்தேர்வு தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (14:14 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டிஎன்பிஎஸ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 2 நேர்முகத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
 
தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணைய அலுவலகத்தில்‌ கடந்த 08.06.2021 முதல்‌ 11.06.2021 வரை நடைபெறவிருந்த மோட்டார்‌ வாகன ஆய்வாளர்‌, நிலை II, 2013-2018 பதவிக்கான நேர்முகத்‌ தேர்வானது, கொரோனா வைரஸ்‌ தொற்று காரணமாக தேது குறிப்பிடாமல்‌ ஒத்தி வைக்கப்பட்டது.
 
மேற்கூறிய பதவிக்கான நேர்முகத்‌ தேர்வானது வருகின்ற 19.07.2021 முதல்‌ 24.07.2021 வரை (21.07.2021 தவிர) தேர்வாணைய அலுவலகத்தில்‌ நடைபெறும்‌ எனத்‌ தெரிவிக்கப்படுகிறது.
 
மேற்கூறிய நேர்முகத்‌ தேர்வில்‌ கலந்து கொள்ள தகுதி பெற்ற 226 விண்ணப்பதாரர்களுக்கும்‌, நேர்முகத்‌ தேர்வில்‌ கலந்து கொள்ளும்‌ தேதி மற்றும்‌ நேரமானது குறுஞ்செய்தி மற்றும்‌ மின்னஞ்சல்‌ வாயிலாக தெரிவிக்கப்படும்‌
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்குவங்கத்திற்கு செல்ல முடியாமல் திடீரென திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்.. என்ன காரணம்?

விமானத்தில் சிகரெட் பிடித்த பாகிஸ்தான் ஹாக்கி அணி மேனேஜர்.. பாதியில் இறக்கிவிட்டதால் பரபரப்பு..!

பெற்ற அப்பாவுக்கே இந்த நிலையா?..இன்சூரன்ஸ் பணத்திற்காக பாம்பை வைத்து தந்தையை கொன்ற மகன்கள்

இம்ரான்கானுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை.. மனைவிக்கும் அதே தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு..!

பொங்கல் பண்டிகைக்கு பிறகு எங்களை பார்த்து ஒட்டுமொத்த நாடே வியக்கும்: செங்கோட்டையன்

அடுத்த கட்டுரையில்
Show comments