Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு தேதி எப்போது? டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!

Advertiesment
tnpsc

Mahendran

, வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (11:29 IST)
குரூப் 4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. மேலும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பணியிடங்களுக்கு இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் டி.என்.பி.எஸ்.சி   தேர்வு செய்து வரும் நிலையில் தற்போது காலியாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 215, இளநிலை உதவியாளர் 1,621, தட்டச்சர் 1,099, இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் 2, இளநிலை வருவாய் ஆய்வாளர் 239, இளநிலை உதவியாளர்(பிணையம்) 46, இளநிலை உதவியாளர் 11, சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை-III) 368, உதவியாளர் 54, கள உதவியாளர் 19, வனக் காப்பாளர் 62, ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் 35, வனக் காவலர் 71 உள்ளிட்ட 3,935 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
 
இந்த பணிக்கான தேர்வு வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி தேர்வு  என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  ஏப்ரல் 25 முதல் மே 24 ஆம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்கள் அறிய டி.என்.பி.எஸ்.சி  அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இருட்டுக்கடை யாருக்கு சொந்தமானது? குடும்பத்தில் எழுந்த பங்காளி தகராறு!?