Publish Date: Sat, 25 Feb 2023 (10:22 IST)
Updated Date: Sat, 25 Feb 2023 (10:33 IST)
தமிழகம் முழுக்க TNPSC குரூப்-2 தேர்வு தொடங்குவது பல இடங்களில் தாமதம் ஆகியுள்ளது.
தமிழக அரசு தேர்வாணையம் மூலம் அரசு பணிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அந்தவகையில் தமிழக அரசு துறைகளில் 5,446 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு கடந்த மே மாதம் 21ம் தேதி குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய தேர்வுகள் நடைபெற்றன.
அதில் முதல் நிலை தேர்வு எழுதியவர்களில் 57,641 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது அவர்களுக்கான முதன்மை தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தேர்வர்களின் பதிவு எண்கள் மாறி இருப்பதால் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தாமதம் ஏற்பட்ட மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என TNPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது