Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று முதல் குரூப் 1 முதன்மைத் தேர்வு.. 2,113 பேர் தேர்வு எழுதுகின்றனர்

Advertiesment
tnpsc
, வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (10:35 IST)
தமிழகத்தில் இன்று முதல் குரூப் 1 முதன்மைத் தேர்வு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.  
 
துணை ஆட்சியாளர், காவல்துறை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை  உதவி இயக்குனர் உள்ளிட்ட பணிகளுக்காக கடந்த நவம்பர் மாதம் முதல் நிலை தேர்வு நடைபெற்றது. 
 
இந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான நிலையில் தேர்வு பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் இந்த தேர்வு ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை  நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த தேர்வை 1,333 ஆண்கள் மற்றும் 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் எழுதுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.  இந்த தேர்வுக்காக சென்னை உள்பட 22 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமமுக , பாமக, ஓபிஎஸ் இணைந்து புதிய கூட்டணியா? கமல் கட்சி, தேமுதிக இணையுமா?