Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றே அக்னி முடிந்தாலும் வெயில் குறையாது!

Webdunia
சனி, 28 மே 2022 (09:03 IST)
இன்று அக்னி முடிந்தாலும் இன்றோடு வெயில் குறையாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 
கடந்த 25 நாட்களுக்கு மேலாக கோடை வெயில் குறிப்பாக அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வந்த நிலையில் இன்றுடன் அக்னி நட்சத்திர வெயில் முடிவடைகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திர வெயில் காலம் இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 
 
அக்னி நட்சத்திர காலத்தில் முதல் இரண்டு வாரங்களாக அசானி புயல் காரணமாக வெப்பம் தணிந்து காணப்பட்டது. இருப்பினும் கடந்த 24 ஆம் தேதி முதல் மீண்டும் தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் கொளுத்தியது. சென்னையில் அதிகபட்சமாக கடந்த 23 மற்றும் 24ந்தேதிகளில் 104 டிகிரி வெப்பம் பதிவானது. 
 
இதனால் அனல் காற்று வீசியதால் மக்கள் அவதியடைந்தனர்.  24 ஆம் தேதி தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது. இன்று அக்னி முடிந்தாலும் இன்றோடு வெயில் குறையாது என்றும் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments