Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை - ஸ்ரீஹரிகோட்டா வரை மிக கனமழை: வெதர்மேன் கணிப்பு!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (11:33 IST)
சென்னை - கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா வரை உள்ள பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் மழை குறித்த கணிப்பை வெளியிட்டுள்ளார். 

 
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. 
 
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் மழை குறித்த கணிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, சென்னை - கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா வரை உள்ள பகுதிகளில் மிக கனமழை நாளை மதியம் வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கி சென்னை நகர் முழுவதும் பரவலாக கன மழை பெய்யகூடும். இதுவரை பெய்த காரைக்கால் முதல் நாகப்பட்டினம் வரை உள்ள பகுதிகளில் மழை மெல்ல குறைய தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments