Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சைவ உணவகத்தில்தான் நிறுத்தனுமா..! சர்ச்சையால் முடிவை மாற்றிய போக்குவரத்துத் துறை!

சைவ உணவகத்தில்தான் நிறுத்தனுமா..! சர்ச்சையால் முடிவை மாற்றிய போக்குவரத்துத் துறை!
, வெள்ளி, 25 மார்ச் 2022 (12:33 IST)
தமிழக அரசு பேருந்துகளை சைவ உணவகங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்ற அறிவிப்பை மாற்றி புதிய அறிவிப்பை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துத்துறையின் அரசு பேருந்துகள் நெடுந்தூரம் பயணிக்கையில் உணவு அருந்துவதற்காக நெடுஞ்சாலை உணவகங்களில் நிறுத்துவது வழக்கம். சமீபத்தில் போக்குவரத்துத்துறை வெளியிட்டிருந்த அறிவிப்பில் இனி அரசு பேருந்துகளை உணவருந்த சைவ உணவகங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

இதற்கு பயணிகள், பொதுமக்கள் இடையே கடும் கண்டனங்கள் எழுந்தன. அசைவம் உண்ண விரும்புபவர்களை சைவம்தான் சாப்பிட வேண்டும் என கட்டாயப்படுத்துவது போல உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக போக்குவரத்துத்துறை அரசு பேருந்துகளை அசைவ உணவகங்களிலும் நிறுத்தலாம் என தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

17 வயது பள்ளி மாணவனை திருமணம் செய்த ஆசிரியர் !