Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் 13 ஆம் தேதி வரை மழை தானாம்!!

Webdunia
திங்கள், 9 மே 2022 (13:32 IST)
நாளை முதல் 13 ஆம் தேதி வரை அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என தகவல். 

 
இந்தியா முழுவதும் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. பல மாநிலங்களில் வெப்ப அனல் காற்று காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது வெளியாகிய தகவலில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நாளை முதல் 13 ஆம் தேதி வரை அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

தொட்டிலில் தூங்கிய 24 நாள் குழந்தை.. குரங்கு கடித்து குதறியதால் பெற்றோர் அதிர்ச்சி..!

19 வயது பெண்ணை காதலித்த இரு இளைஞர்கள்.. கொலையில் முடிந்த முக்கோண காதல்..!

மேற்கு வங்க ரயில் விபத்து..! பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு..! மீட்பு பணி தீவிரம்..!!

பிரதமர் மோடியின் தமிழகம் பயணம் திடீர் ரத்து! என்ன காரணம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments