நம்மூர் அரசியல்வாதிகள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக்கி பிரச்சனை செய்யவில்லை என்றால் அவர்களுக்கு தூக்கம் வராது. கடந்த இரண்டு நாட்களாக இந்தி திணிப்பு என்ற போராட்டத்தை அறிவித்து வரும் அரசியல் கட்சிகள் தற்போது அடுத்த பிரச்சனையாக தமிழக அரசின் பாடநூல் ஒன்றின் அட்டையில் உள்ள பாரதியாரின் தலைப்பாகை நிறத்தை கையில் எடுத்துள்ளனர்.
பாஜகவின் அடிமை அரசாக இருக்கும் அதிமுக, பாடநூல்களிலும் காவியை புகுத்தி வருவதாகவும், பள்ளி மாணவர்களிடையேயும் காவியை புகுத்தி வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் ரூ.200க்காக போராடும் போலி போராளிகள் தங்களுடைய புரட்சிகரமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பாடப்புத்தகத்தை வடிவமைத்த டிசைனர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், 'பாரதியாரின் தலைப்பாகை நிறம் தேசியக் கொடியை பிரதிபலிக்கும் விதமாகவே அந்த வடிவமைப்பை உருவாக்கியதாகவும், அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்தார்
இருப்பினும் திருப்தி அடையாத ரூ.200 போராளிகள் மீண்டும் மீண்டும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தி வருகின்றனர்.